Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.கார்த்திகேசு / 2018 ஜனவரி 25 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் சீரான மழை விழ்ச்சி இல்லாத காரணத்தாலும் குளங்களில் நீர்பானத்துக்கான போதிய நீர் இல்லாமையாலும் மேட்டு நிலப் பகுதிகளில் சுமார் 8ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற் செய்கை அழிவடைந்துள்ளதாக, பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் ஆரம்ப விவசாய கூட்டத் தீர்மானத்தின் பெரும்போக நெற் செய்கைக்காக 29 விவசாயக் கண்டங்களிலும் சுமார் 16ஆயிரம் ஏக்கர் நெற் செய்கைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டு, விவசாயிகளால் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஏற்பட்டுள்ள வரட்சியால் வயல்கள் அழிவடைந்துள்ளன.
இது தொடர்பாக விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்
“கடந்த வருடமும் வரட்சி காரணமாக எமது நெற் செய்கை பாரிய நட்டத்தை ஏற்படுத்தியிருந்தது. இம்முறையும் நட்டத்தை எற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
“கடந்த வருடம் வரட்சி நிவாரணம் மூன்று கட்டங்களாக வழங்குவதாக தெரிவித்து, ஒரு தடவை மாத்திரம் கொடுத்து மீதி நிவாரணத்தை அரசாங்கம் வழங்கவில்லை.
“இவ்வாறு தொடர்ந்து வறட்சி ஏற்படாதவாறு முறையான நீர்ப்பாசன வசதிகளையும் செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்” என்று, கோரிக்கை விடுத்தனர்.
வரட்சி தொடர்பாக தம்பிலுவில் கமநல சேவைகள் திணைக்களத்தின் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, “திருக்கோவில் பிரதேசத்தில் பெரும்போக நெற் செய்கை காணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சில கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
“இதனையடுத்து, நீர்பாசன பொறியலாளருடன் கலந்தரையாடிய போது, குளங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைந்திருப்பதாகவும் குறிப்பாக கஞ்சிகுடிச்சாறு குளத்தில் சுமார் அறு அடி நீர்தான் உள்ளதாகவும் அதனையும் திறந்து விடுவதாகவும் தெரிவித்தார்” என்றார்.
இதேவேளை, மழை வீழ்ச்சி கிடைக்காக சந்தர்ப்பத்தில் திருக்கோவில் பிரதேசத்தில் அடுத்த சிறுபோகம் நெற் செய்கை செய்கை மேற்கொள்ள முடியாத நிலைமையும் எற்படலாம் என விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் மார்க்கண்டு சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago