2025 ஜூலை 02, புதன்கிழமை

திலீபன் நினைவேந்தல்; கூட்டம், ஊர்வலம் நடத்த தடை

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , பி.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

தியாகி திலீபனின் நினைவேந்தல்தினக் கூட்டம், ஊர்வலத்தை நடத்த காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலுக்கு, நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுள் ஒருவரான திலீபனின் நினைவு தினத்தை நினைவுகூர தவிசாளர் ஜெயசிறில் நடவடிக்கை எடுத்துவருவதாக, புலனாய்வுத் தகவல்கள் முறையிட்டிருப்பதால் அதனைத் தடுத்துநிறுத்த தடையுத்தரவு விதிக்குமாறு கோரி, சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றுக்கு, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டீ.எஸ்.ஜயலத் விண்ணப்பித்திருந்தார்.

இவ்வாறான கூட்டம், ஊர்வலம் போன்றவற்றால் பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் தடங்கல்கள், சேதம் ஏற்படவாய்ப்புள்ளது உள்ளதாகவும்  எனவே அவற்றைத் தடைசெய்ய உத்தரவை வழங்குமாறும் கேட்டிருந்தார்.

அதனையேற்ற சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம், குற்றவியல் நடவடிக்கைமுறை  சட்டக்கோவையின்படி, மேற்படி நினைவேந்தல் கூட்டம், ஊர்வலம் என்பவற்றை நிறுத்துமாறு கட்டளை  பிறப்பித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .