2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தீகவாபியில் புதிய வைத்தியசாலை

Editorial   / 2022 ஜனவரி 12 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுக்குட்பட்ட தீகவாபி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட வைத்தியசாலையின் திறப்பு விழா, இன்று (12) நடைபெற்றது.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இவ்வைத்தியசாலையைத் திறந்து வைத்தார்.

 “கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் 18 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலையில் அனைத்து நவீன வசதிகளை ஏற்படுத்துவதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை பெற்றுத்தருவதற்கும் காலக்கிரமத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என ஆளுநர் அனுராதா யஹம்பத் இதன்போது உறுதியளித்தார்.

இத்திறப்பு விழாவில் கிழக்கு  மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் எம்.எஸ்.தொளபீக், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.எம்.வாஜித், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹிர் ஆகியோரும் அதிதிகளாக கலந்துகொண்டதுடன், வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .