2025 மே 15, வியாழக்கிழமை

தீப்பெட்டிக்குள் போதைப்பொருள் கடத்திய இளைஞன் கைது

Editorial   / 2020 ஒக்டோபர் 04 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

ஹெரோய்ன் போதைப்பொருளை சூட்சுமமாக கடத்திய இளைஞனை,   நேற்று (03) இரவு இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைபள்ளி வீதியில் சந்தேகத்துக்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடிய 29 வயதுடைய மேற்படி இளைஞனை, வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சோதனை செய்தனர்.

இதன்போது, அந்த இளைஞன் வருகை தந்த மோட்டார் சைக்கிளின் ஆசனத்தின் கீழ், தீப்பெட்டியொன்றில் மறைத்து, சிறு பொதி செய்யப்பட்ட ஹெரோய்ன் பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டன.

தொடர்ந்து விசாரணையை முன்னெடுத்த பின்னர், அவ்விளைஞனின் வீட்டில் இருந்து தடை செய்யப்பட்ட மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.

இளைஞனினிடம் இருந்து 10 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள்,  மாவா தூள் 30 கிராம் என்பன கைப்பற்றப்பட்டு, கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .