Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூலை 09 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு
சிறுபான்மையின மக்களின் முழுமையான ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு தடைகள் ஏற்படும் போதிலும் புதிய அரசியலமைப்பு, அதிகாரப்பகிர்வு என்பவற்றைக் கொண்டுவருவதற்கு ஒருபோதும் தயங்கக்;கூடாது என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்; தெரிவித்தார்.
திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையானது, ஆதார வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வைத்தியசாலையை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (8) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது. 'அனைத்துக் கட்சிகளின் ஆலோசனை மற்றும் அங்கிகாரத்துடன் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு முறைமைக்கு திடீரென ஒரு குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்து வருவது, இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு மனச் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.
'தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வையோ அல்லது அரசியல் தீர்வையோ வழங்குவதற்கு இந்த நாட்டில் காலாகாலமாக எதிர்ப்புகளும், தடைகளும் இருந்துகொண்டே வந்துள்ளன' என்றார்.
'தற்போது அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் நல்லாட்சி அரசாங்கம், புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
'இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் சமாதானத்துடன் வாழவே விரும்புகின்றனர். எனவே, அனைத்து மக்களுக்கும் சமத்துவமான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரப்பகிர்வை வழங்குவதன் மூலம் நிலையான சமாதானத்தையும், அபிவிருத்தியையும் இந்த நாட்டில் ஏற்படுத்த முடியும் என்பதை தீர்வு யோசனைகளுக்கு தடையாக இருந்து வருகின்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்' என்றார்.
19 minute ago
28 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
28 minute ago
46 minute ago