2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘தீர்வைக் கொடுக்கும் வரை சாய்ந்தமருது மக்கள் பொறுத்திருக்க வேண்டும்’

Editorial   / 2018 பெப்ரவரி 05 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா, பைஷல் இஸ்மாயில்

எந்த பிரதேசத்துக்கும் பாதிப்பில்லாத வகையில், தீர்வைக் கொடுக்கும் வரை சாய்ந்தமருது மக்கள் பொறுத்திருக்க வேண்டும்” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

“சாய்ந்தமருதுக்குத் தனியான உள்ளூராட்சிமன்றம் கிடைக்கும் வரை, கல்முனை மாநகர சபையின் மேயர் பதவி, அந்த மண்ணுக்கே வழங்கப்படும் என்பதை சாய்ந்தமருது மண்ணில் வைத்து பிரகடனம் செய்கிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், “அதுவரைக்கும் இந்த மாநகரை, 'கல்முனை - சாய்ந்தமருது மாநகரம்' எனப் பெயரிடுவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது, பௌசி மைதானத்தில் நேற்று முன்தினம் (03) நடைபெற்‌ற 'மாண்புறும் சாய்ந்தமருது' எழுச்சி மாநாட்டில், பிரதம அதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,

“கடந்த தேர்தலில், எங்களுக்கு சாய்ந்தமருதில் வழங்கப்பட்ட வாக்குகள், இந்த முறையும் கிடைக்கும். இந்தமுறை மேயர் பதவியை தந்துதான் சாய்ந்தமருது மண்ணை கட்சி அலங்கரிக்கும். சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேசசபை வழங்கப்படும் வரை மேயர் பதவி தொடரும். அதை யாராலும் தடுக்க முடியாது.

“கல்முனையிலுள்ள யாரும் அதை எதிர்த்துப் பேசமாட்டார்கள். அதுவரை இந்த மாநகரம், “கல்முனை - சாய்ந்தமருது மாநகரம்” எனப் பெயர் மாற்றப்படும்.

“சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவதாக நான் வாக்குறுதி வழங்கியிருக்கிறேன். அந்த வாக்குறுதியை, என்றைக்கும் நான் மறந்து செயற்பட்டதில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .