2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில்..

Freelancer   / 2021 டிசெம்பர் 25 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - திருக்கோவின் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கி பிரயோகம் நடத்திய, பொலிஸ் உத்தியோகத்தர் ஜனவரி மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரை, எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விடுமுறை தொடர்பில் எழுந்த கருத்து வேறுபாட்டை அடுத்தே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X