2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தூங்கிய நிலையில் சடலம் மீட்பு

வி.சுகிர்தகுமார்   / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாரை மாவட்டம், திருக்கோவில் காயத்திரி அம்மன் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள, சிறிய மலைப்பகுதியினை அன்மித்த பகுதியின் ஆலமரமொன்றின் கீழ் தூங்கிய நிலையில், காணப்பட்ட சடலமொன்றினை இன்று(25) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸா​ர்  தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர், திருக்கோவில்-04 ஆம் பிரிவில் வசித்து வந்த,  41 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான குருநாதபிள்ளை விமலநாதன் என்பவரெனத் தெரிவித்தனர்.

சடலம் மீட்க்கப்பட்ட இடத்திற்கருகாமையில், அவரது மோட்டார் சைக்கிள், தலைக்கவசம் மற்றும் கைத்தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான, மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X