Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 நவம்பர் 14 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எதிர்பார்ப்புகள் அற்ற தூய்மையான செயற்பாடுகளை எந்தவொரு சக்தியாலும் தடைசெய்ய முடியாது” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமில் தெரிவித்தார்.
அவர், இன்று (14) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடைய உருவப் பொம்மையை, அண்மையில் சாய்ந்தமருதில் எரித்த விடயத்தில், பள்ளிவாசலுக்கும் சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி சபையை பெறவேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்களும் சம்மந்தம் இருப்பதாக நான் கருதவில்லை.
“அமைச்சருடைய வளர்ச்சியில் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ஒரு சிறு குழுவினரால், குறித்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“சாய்ந்தமருது மக்கள், தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்பது மிகவும் நியாயமான விடையம். மாகாண சபையில் தனிநபர் பிரேரணை நிறைவேற்றியது முதல், அமைச்சர் ரிஷாட் தலைமையில், சாய்ந்தமருத்துக்கான உள்ளூராட்சி சபை விடயத்தில் முழுமையான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றோம்.
“அமைச்சர் இந்த விடயத்தில் மிகுந்த உளத்தூய்மையுடன் செயற்படுகின்றார். தூய்மையான எங்களது முன்னெடுப்புகளை யாரும் தடைசெய்ய முடியாது.
“சாய்ந்தமருது மக்களுக்கு உள்ளூராட்சி சபையைப் பெற்றுத்தருவோமென, போலியான வாக்குறுதிகளை வழங்கி, பல்வேறு சந்தர்ப்பங்களில் தங்களது வாக்கு வங்கியை நிரப்பிக்கொண்டு, அதனூடாக சுகபோகம் அனுபவிப்பவர்கள்தான், அம்மக்களின் அபிலாஷைகளுக்குத் தடையாக இருக்கின்றார்கள் .
“இனிமேலும், இவ்வாறான பொய்களை மக்கள் நம்பப்போவதில்லை. கல்முனையைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளே, சாய்ந்தமருது மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அநேகமான, கல்முனை மக்கள், சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி சபையை வழங்க விரும்புகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago