Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 16 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
தென்கிழக்கு பல்கலைகழக ஊழியர் சங்கத்தின் 23ஆவது வருடாந்த ஒன்றுகூடல், சங்கத்தின் தலைவர் எம்.எம். நௌபர் தலைமையில், ஒலுவில் வளாக தொழில்நுட்ப பீட கேட்போர் கூடத்தில் நேற்று (15) நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக பிரதிப் பதிவாளர் எஸ்.சிவக்குமார் மற்றும் பதில் நிதியாளர் சீ.எம். வன்னியாரா ச்சி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இரண்டு அமர்வுகளாக இடம்பெற்ற நிகழ்வின் முதல் அமர்வில் பல்கலைக்கழகத்தில் தாங்களது 25 வருடகால சேவையை பூர்த்தி செய்தவர்களும் சேவைக்காலத்தின்போது மிகக் குறைந்த அளவான விடுமுறையை எடுத்தவர்களும் இங்கு கடமையாற்றி வேறு பல்கலைகழகங்களுக்கு பதவி உயர்வு பெற்றுச்சென்றவர்களும் ஊழியர் சங்கத்தால் பாராட்டி, நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வின் இரண்டாவது அமர்வின்போது, புதிய ஆண்டுக்கான நிர்வாக தெரிவு இடம்பெற்றது.
குறித்த தெரிவில் சில பதவிகளுக்காக உறுப்பினர்கள் ஏற்கெனவே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சில பதவிகளுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்ததன் காரணமாக குறித்த பதவிகளுக்கு உறுப்பினர்களை தெரிவதற்காக இடம்பெற்ற தேர்தலின்போது அதிகப்படியான வாக்குகளைப்பெற்று புதிய தலைவராக சிரேஷ்ட உத்தியோகத்தர் எம்.ரீ. முஹம்மது தாஜுதீனும் செயலாளராக எம்.எம்.முஹம்மது காமிலும் தெரிவாகினர்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்கள் வருமாறு:
தலைவர்: எம்.ரீ.முஹம்மது தாஜுதீன்
உப தலைவர்: எம்.சீ.அப்துல் கபூர்
செயலாளர்: எம்.எம்.முஹம்மது காமில்
உப செயலாளர்: எம்.எல்.றினாஸ்
உப செயலாளர் பிரயோக விஞ்ஞான பீடம்: பி.எம்.ஹிதாயத்துல்லாஹ்
பொருளாளர்: ஏ.முஹம்மது றினோஸ்
நலன்புரி இணைச்செயலாளர் ஆண்: எம்.ஆர்.முஹம்மது றம்னாஸ்
நலன்புரி இணைச்செயலாளர் பெண்: ஏ.ஆர்.ஜிப்ரியா நௌபர்
உள்ளக கணக்குப் பரிசோதகர்: எம்.ரீ.ஹாஸீர் முகம்மட்
நிருவாக உத்தியோகத்தர்கள்
பதிவாளர் பகுதி 1: எம்.ஜி.றோஷான்
பதிவாளர் பகுதி 2: ஏ.ஏ.முகம்மது புசைல்
நிதியாளர் பகுதி ஏ.எல். சதக்கத்துல்லாஹ்
முகாமைத்துவ வர்த்தக பீடம்: ஜெ.ஆப்தீன்
கலை கலாச்சார பீடம்: வை.முபாறக்
இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடம்: முகம்மது அஷ்ரப்
பிரயோக விஞ்ஞான பீடம்: ஏ.முகம்மட் றம்ஸான்
தொழில்நுட்ப பீடம்: எஸ்.றிபாய்தீன்
பொறியியல் பீடம்: ஐ.எல்.எம்.றிஸ்கான்
சாரதிகள் பிரிவு: இசட் அப்துல் லாபீர்
பிரதான நூலக பிரிவு: எம்.ஏ.முகம்மட் இஸ்மாயில்
பாதுகாப்புப் பிரிவு: ஏ.எல்.றிஸ்வான்
ஆய்வுகூட பிரிவு: ஐ. ஜௌபர்
களஞ்சியப் பிரிவு: எம்.எம்.முஹம்மது றம்ஸீன்
பராமரிப்புப் பிரிவு: ஏ.எல்.கமால்தீன்
நில அலங்காரப் பிரிவு: எம்.ஐ.தாஹிர்
நலன்புரி உடற்கல்விப் பிரிவு: ஐ.எல்.றுக்சான்
வெளிவாரி கற்கைகள், பணியாளர் மேம்பாடு மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு: எம்.எச்.முகம்மது நஸார் (N)
24 minute ago
28 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
28 minute ago
48 minute ago
1 hours ago