2025 மே 07, புதன்கிழமை

தேசிய உணவுச்சாலை கிழக்கு ஆளுநரால் திறப்பு

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

கமத்தொழில், கால்நடை அபிவிருத்தி நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பேராதனை விவசாயத் திணைக்களமும், கிழக்கு மாகாண விவசாய திணைக்களமும் ஒன்றிணைந்து நிர்மாணிக்கப்பட்ட  "இலங்கையின் உண்மையான சுவை"  "ஹெல பொஜுன் ஹல" தேசிய உணவுச்சாலை கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி  சில்வாவினால்  உத்தியோகபூர்வமாக நேற்று திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மட்டிக்களியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த உணவகத்தில்  பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் பானங்கள் பொதுமக்களின் நுகர்விற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

தொற்றா நோய்களின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கும், பாரம்பரிய உணவினை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும், புற்றுநோய் சீனி நோய் போன்ற நோய்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கும் இந்த உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிகழ்வில் பிரதி விவசாயப் பணிப்பாளர் எம். பரமேஸ்வரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி. எம் சரத் அபேகுணவர்தன, விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டபிள்யூ. எம். டபிள்யூ வீரக்கோன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கே. சிவநாதன், கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் கலாநிதி எஸ். எம் ஹுசைன், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என். ஏ. ஏ. புஸ்பகுமார திருகோணமலை மாவட்ட விவசாய பணிப்பாளர் எம். குகதாசன், திருகோணமலை உதவி கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ். புனித குமார் திருகோணமலை மாவட்ட நகர சபை தவிசாளர் எம். இராசநாயகம், பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் எஸ் அருள்ராஜ்  திணைக்களங்களின் செயலாளர்கள் என பலரும்  கலந்துகொண்டனர். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X