2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தேசிய காங்கிரஸில் புதுக்கூட்டு

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2017 நவம்பர் 20 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் பலர்,  தேசிய காங்கிரஸில் இணைந்துகொண்டனர்.

தேசிய காங்கிரஸின் பொத்துவில் மத்திய குழுவால் நேற்றிரவு (19) ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வொன்றின் போதே, இவர்கள் இணைந்து கொண்டனர்

அறுகம்பை அபிவிருத்தி போரத்தின் தலைவர் எம்.எச்.எம். ஜமாஹிம், தொழிலதிபர்களான எம்.எஸ். அன்சார், எஸ்.எம். முஹ்சீன், ஏ.முகைதீன் பாவா மௌலவி உட்பட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவாலர்களே, இவ்வாறு தேசிய காங்கிரஸில் இணைந்துள்ளனர்.

தேசிய காங்கிரஸின் கொள்கையும் அக்கட்சியின் தலைமைத்துவத்தில் கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே, அக்கட்சியில் இணைவதற்கு உந்துதலாக அமைந்தது என, இணைந்து கொண்டவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

“மக்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வந்துள்ள முஸ்லிம்கள் கட்சிகளின் தலைமைகள் சமூகத்திற்கு எதனையும் செய்ய முடியாது பேரினவாத சக்திகளின் பின்னால் சுகபோகம் அனுவத்து வருகின்றனர்.

“இவர்களின் ஏமாற்று அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் சமூகத்தின் தேவைகள், உணர்வுகள், பிரச்சினைகளை அறிந்துகொண்டுள்ள தேசிய காங்கிரஸின் தலைமைத்துவத்தை பலப்படுத்துவதற்காகவுமே எமது இணைவு அமைந்துள்ளது” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .