2025 மே 05, திங்கட்கிழமை

தேசியப் பட்டியல் எம்.பியாக பசிலை நியமிக்க கோரி கையெழுத்து

Princiya Dixci   / 2020 நவம்பர் 16 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்             

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பியாக பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை நியமிக்க வேண்டுமெனக் கோரி, நாட்டைக் காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண தலைமையால் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டை காக்கும் இளைஞர் அணியின் கிழக்கு மாகாண தலைவர் முஹமட் முஸ்தபா முஹமட் நிசாமின் வழி நடத்தலுக்கு அமைய, அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் பிரதேசங்களில் இந்தக் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்படி பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, கல்முனை போன்ற பிரதேசங்களில் இளையோர்கள் முதல் பெரியோர்கள் வரை பலர் கையெழுத்துகளை இடுகின்றமையை காண முடிகின்றது.

இது குறித்து ஊடகங்களுக்கு இன்று (16) கருத்துத் தெரிவித்த நிசாம், “பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக பதவி காலத்தில் சகல துறைகளிலும் பாரிய முன்னேற்றங்களை கண்டு வந்திருக்கின்றது. எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவரை தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். 

மேலும், நடக்கவுள்ள புதிய அமைச்சரவை மாற்றத்தின்போது, துறை சார்ந்த நிபுணர்களான வியத்மகே அமைப்பு சார்ந்த பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூடுதலான முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வேண்டுமெனவும் இதன் மூலம் ஜனாதிபதியின் வேலைத் திட்டங்களை மக்களின் காலடிக்கு கொண்டு வருவது இலகுவாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X