Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 பெப்ரவரி 10 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் ஜனநாயகத்தை மோலோங்கச் செய்யும் வகையில், தேர்தலொன்றை, மக்கள் எதிர்பார்த்துள்ளனர் என்பதை, நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் புரிந்து செயற்பட வேண்டியது அவசியமென, முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இல்லதில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், காலம் நிறைவடைந்த மாகாண சபைகளின் தேர்களை உடன் நடத்த வேண்டுமென, மூவின மக்களும் விரும்புகின்றார்கள் என்றார்.
எனினும், அதைப் புரிந்துகொள்ளாமல் நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் பொருத்தமற்ற காரணங்களைக் கூறி, காலத்தை இழுத்தடிப்புச் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் அவர் தெரிவித்தார்.
நாட்டில் இன்று ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை தோன்றியுள்ளதாகவும் ஜனாதிபதி ஒரு கருத்தையும் பிரதமர் ஒரு கருத்தையும் கூறி, நாட்டைக் குழப்பமானதொரு நிலைக்குக் கொண்டு செல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, மாகாண சபைத் தேர்தலை நடத்தி, பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்வதன் மூலம், ஒரு ஸ்தரமான அரசாங்கத்தை, மக்கள் ஆணையுடன் அமைக்கக் கூடியதாக இருக்கும் என்பதே, இந்த நாட்டின் மக்களது எண்ணமாகவுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
48 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
7 hours ago
7 hours ago