2025 மே 05, திங்கட்கிழமை

‘தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பது ஜனநாயக விரோதச் செயல்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஜனவரி 16 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் இழுத்தடிப்பது ஜனநாயக விரோத செயல் என்பதை, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடிய அனைவரும் மறந்து விடக் கூடாதென, நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தவிசாளரும், அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினருமான கலாநிதி சிறாஜ் மசூர் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.  

இது தொடர்பாக இன்று (16) அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாகாண சபைத் தேர்தலைத் துரிதமாக நடத்துவதற்கு அவசியமான சட்டத் திருத்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சம்மந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தப்பட்ட புதிய தேர்தல் முறையில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதால், பழைய விகிதாசார முறையில் தேர்தலை நடத்துமாறும் அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X