2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தைப்பொங்கல் அன்று பட்டத் திருவிழா

Editorial   / 2022 ஜனவரி 10 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 வி.ரி.சகாதேவராஜா

திருக்கோவில் பிரதேச பொதுமக்களின் ஏற்பாட்டில், திருக்கோவில் பிரதேசத்தில் தைப்பொங்கல் திருநாளையொட்டின, நான்காவது முறையாக இடம்பெறவுள்ள பட்டம் விடும் திருவிழா, எதிர்வரும் 14ஆம்  திகதி பிற்பகல் 02 மணி முதல் மாலை 6.30 மணி வரை திருக்கோவில் சித்திர வேலாயுதசுவாமி கோவில் முன்றலில் இடம்பெறவுள்ளது.

ஆர்வம் உள்ளவர்கள் இதில் கலந்துகொள்ளலாம் என்றும் சிறந்த தயாரிப்பு பட்டங்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்கள் உண்டு என்றும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும், சிறந்த புகைப்படப்பிடிப்பாளர்களுக்கும் பரிசு வழங்கப்படவுள்ளது. அத்தோடு, இப் புகைப்படங்களை #Tkkitefestivel2022 எனும் டெக்குடன் பேஸ்புக்கில் தரவேற்றம் செய்வதன் முலம் கிடைக்கப்படும் விருப்புகளுக்கு அடிப்படையில் பரிசுகள் வழங்கப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .