2024 மே 10, வெள்ளிக்கிழமை

தொடர்ந்தும் பைசர் தடுப்பூசி ஏற்றல்

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கொவிட்-19 பைசர் தடுப்பூசி தொடர்ந்து ஏற்றப்பட்டு வருவதாக, அட்டானைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி டொக்டர் ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

இதுவரை எதுவித தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதவர்கள் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

முதலாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள், இரண்டாவது தடுப்பூசியையும், இரண்டாவது தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியையும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுள்ளார்.

கொவிட்-19 மூன்றாவது தடுப்பூசி பெற்ற 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 04ஆவது பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சகல பாடசாலைளிலும் 12 தொடக்கம் 15 வயது வரையிலான முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு, பைஸசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடு செல்பவர்களுக்கு கொவிட்-19 பைசர் தடுப்பூசியை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், பொதுச் சுகாதார பரிசோதகர்களைத் தொடர்புகொண்டு தமக்கான தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.

தடுப்பூசிகளை பெற்று, வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி பெற்றமைக்கான சான்றிதழை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாமெனவும் அவர் மேலும் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .