Editorial / 2018 ஜனவரி 29 , பி.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கான பிரதேசத்துக்கு, ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் அதிகாரியாக அட்டாளைச்சேனை முதலாம் பிரிவைச் சேர்ந்த ஊடகவியலாளர் எம்.ஐ.முஹம்மது பைஷல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம், நேற்று முன்தினம் (27) கிடைப்பெற்றுள்ளது.
இந்த நியமனக் கடிதம், ஜனாதிபதியின் இருங்கிணைப்புச் செயலாளர் சட்டத்தரணி ஷிரால் லக்திலக, ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்ட தேசிய ஒருங்கிணைப்பாளர் பாலித லிஹினியகுமார ஆகியோரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதியின் விசேட கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கான மக்கள் பங்கேற்பை உறுதிப்படுத்துவதையும், ஜனாதிபதியின் தொலைநோக்கை, பொதுமக்களிடம் கொண்டு செல்வதையும் நோக்காகக்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி மக்கள் தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டத்துக்காக வேண்டி மேற்படி பதவிக்கு, இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
8 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
2 hours ago
2 hours ago