2025 மே 08, வியாழக்கிழமை

’தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற மக்கள் ஒத்துழைப்பு வேண்டும்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 05 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழு உறுப்பினருமான வைத்திய கலாநிதி திலக் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் இன்று (05) விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரம்பலில் இருந்து வீட்டையும், நாட்டையும் பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனும் திடசங்கற்பம் பூண்ட வேண்டும்.

“மக்கள், தமது உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வது அவசியம். சுகாதாரத் துறையினரின் வழிகாட்டல், விழிப்பூட்டல் ஆகியவற்றுக்கு அமைவாக ஒவ்வொரு பிரஜையும் செயற்படுதல் வேண்டும். சுய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட அறிவூட்டல்களை தவறாது பின்பற்றி நடத்தல் வேண்டும். 

“அடுத்து வருகின்ற நாட்கள் மிகவும் முக்கியமானவை. எனவே, உங்கள் குடும்ப நலனை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பொது நலனை முன்னிறுத்தியும் செயற்படுங்கள். அரசாங்கம் உங்களின் அனைத்து நலன்களையும் பேணி பாதுகாத்து மேம்படுத்துகின்ற செயற்றிட்டங்களை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டு வருகின்றது” என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X