2025 மே 07, புதன்கிழமை

தொழில் நுட்ப கல்லூரியின் பரீட்சை தினத்தை மாற்றுமாறு வேண்டுகோள்

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எல்.எஸ்.டீன்

இலங்கை பரீட்சை திணைக்களம் நடாத்தும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையும், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பயிற்சித் திணைக்களம் நடாத்தும் தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சையும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளதனால் தொழில் நுட்ப கல்லூரியின் பரீட்சையை வேறு தினத்திற்கு மாற்றுமாறு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் பரீட்சாத்திகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 06 மாதகால தொழிற்பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்த மாணவர் களுக்கான இறுதிப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் நடைபெறுவதற்கு தினம் குறிக்கப் பட்டுள்ளது. க.பொ.த.உயர்தரப் பரீட்சையும் அதே மாதத்தில் அதே தினத்தில் நடைபெறுவதற்கு அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதனால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது முறையாக தோற்றும் பரீட்சாத்திகள் சில பாடங்கள் ஒரே தினத்தில் நடைபெறவுள்ள மையால் பாதிக்கப் பட்டுள்ளனர். 

 ஆகவே,பரீட்சாத்திகளுக்கு இரண்டு பரீட்சைகளும் மிக முக்கியமானதாகையால் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பயிற்சித் திணைக்களம் நடாத்தும்  இறுதிப் பரீட்சையை வேறு தினத்திற்கு மாற்றித் தறுமாறு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பயிற்சித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் பரீட்சாத்திகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X