Editorial / 2020 ஜூலை 01 , பி.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள், இம்மாதம் 06ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளனவென, அக்கரைப்பற்று க் கல்லூரியின் அதிபர் எம்.சோமசூரியம் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்கள் வருகை தரும் போது கட்டாயம் தமது பிரவேச அட்டையைக் கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முதற் கட்டமாக 06 மாதகால குறுங்கால பாடநெறிகளும் முழு நேர கற்கை நெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரண்டாம் கட்டமாக, ஒரு வருடகால பாடநெறிகள், இம்மாதம் 13ஆம் திகதியும் சகல பகுதி நேர பாடநெறிகளும் 11ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும், கூறினார்.
அத்துடன், ஒவ்வொரு கற்கை நெறிக்குமான விரிவுரைகளை ஆரம்பிக்கும் நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் தமது பிரிவுத் தலைவர்களைத் தொடர்புகொள்ளுமாறு, கல்லூரியின் அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago