2025 மே 05, திங்கட்கிழமை

தோட்டாக்கள் அடங்கிய பொதி மீட்பு

Princiya Dixci   / 2021 ஜூலை 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

வீடொன்றில் இருந்து 15 தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்றை, இன்று (07) மதியம் கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை 5ஆம் கிராமசேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில்  உள்ள வீடொன்றின் கூரையில் எம்-16 ரகத் துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

துப்பாக்கித் தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டு, பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

கல்முனை பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X