2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தோல்வி கண்டுள்ள அரசாங்கத்துக்கு மக்கள் பதிலளிப்பர்

Editorial   / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

சகல விடயங்களிலும் தோல்வி கண்டுள்ள இந்த அரசாங்கத்துக்கு எதிர்வரும் தேர்தலில் பதிலளிக்க மக்கள் காத்திருக்கிறன்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கல்முனை  ஆதார வைத்தியசாலைக்கு 30 இலட்சம் ரூபாய்‌ பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு, நேற்று (16) நடைபெற்றது.

இதில்  கலந்துகொண்டு உரையாற்றும் போதே, எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்: “தற்போதைய அரசாங்கத்திடம் முறையான முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமையாலேயே நாடு இன்று பாரிய பொருளாதார பின்னடைவைக் கண்டுள்ளது.

“கொரோனாவினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு,  அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் பங்களிப்புடன் உதவித் திட்டங்கள் அமுல்படுத்துகின்றன.

“உலகிலேயே ஓர் எதிர்க்கட்சி மக்களின் நலனுக்காக அரசு போன்று பெரும் தொகைப் பணத்தை செலவு செய்கிறோம் என்றால், அது நாம்தான். 

“அரசாங்கத்திடம் பொருளாதாரம், விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளில் ஒழுங்கான திட்டமிடல் இல்லை. கொரோனா போன்ற அனர்த்த நிலைமைகளின் போதும் எவ்வாறு முன் ஆயத்தங்களுடன் செயற்பட வேண்டும் என்றும் தெரியாது.

“தேர்தல் ஒன்று வருகின்ற போது, பொதுமக்கள் இவர்களுக்கான ஒழுங்கான பதிலை வழங்கக் காத்திருக்கின்றார்கள்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X