2025 மே 05, திங்கட்கிழமை

தோ்தலுக்கான விவரம் திரட்டல்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 டிசெம்பர் 02 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேர்தல் க​டமைகளில் பணியாற்றுவதற்கு அலுவலகங்கள், பாடசாலைகளில் பணியாற்றுகின்ற அரச உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த விவரங்களை, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கமைவாக, அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்கிரமரத்ன கோரியுள்ளார்.

இது தொடர்பான கடிதம், அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல அரச நிறுவனங்களின் தலைவர்கள், அரச பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கெனவே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த விவரங்களை, அம்பாறை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் நேரடியாக அல்லது தபால் மூலம் கிடைக்கச் செய்யுமாறு, அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X