Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 12 , மு.ப. 07:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 75 சதவீதமான நிதி முறையான திட்டமிடல், கூட்டுப்பொறுப்பு இல்லாமை காரணமாக திரும்பிச் செல்லும் நிலை காணப்படுவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்; ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், அப்பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைஷால் காசீம் ஆகியோரால் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 85 இலட்சம் ரூபாய் நிதி திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
'அரசாங்கத்திடமிருந்து நிதியை அபிவிருத்திக்காக கொண்டுவருவது அரசியல்வாதிகளின் பொறுப்பாகும். அந்த நிதியைக் கொண்டு திட்டங்களை அமுல்படுத்துவது அதிகாரிகளின் கடமையாகும்.
'நிதியை இவ்வாறு அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்வது இலகுவான காரியமல்ல. இந்த நிதியை பல முயற்சிகளுக்கு மத்தியில் மிகுந்த சிரமத்துடன் கொண்டுவந்து சேர்க்க வேண்டியுள்ளதென்பதை அனைவரும் உணரவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
'பிரதேச சபையின் அசமந்தப்போக்கே இதற்குக் காரணம். பிரதேச சபையின் கீழ் பொறுப்பேற்கப்பட்ட வேலைத்திட்டங்களை அந்தந்த வருடத்தினுள் செய்து முடிப்பது அவர்களினது கடமையும் பொறுப்புமாகும்' எனவும் அவர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.எம். அஸ்லம், பிரதேச சபையின் செயலாளர் ஏ.எச்.கலீலுர்றஹ்மான் மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி, மகளிர் சங்கங்களின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
7 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago