Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்துக்கான திட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்துக்கு ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் ரூபாய் நிதி இறுதியில் வேறு மாவட்டப் பாடசாலையொன்றுக்கு மாற்றப்பட்டமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தாண்டாயுதபாணிக்கு இன்று புதன்கிழமை அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
அக்கடிதத்தில், 'மத்திய உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சும் இணைந்து மேற்குறித்த திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள 16 கல்வி வலயங்களில் வகுப்பறைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் 2015ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்துவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வகுப்பறைக் கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கமைய திருகோணமலை வலயக் கல்வி வலயம், திருகோணமலை தெற்குக் கல்வி வலயம், மூதூர் கல்வி வலயம், கிண்ணியா கல்வி வலயம், மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு வடக்கு கல்வி வலயம், மட்டக்களப்பு மத்திய கல்வி வலயம், கல்குடா கல்வி வலயம், பாண்டிருப்பு கல்வி வலயம், கல்முனை கல்வி வலயம், சம்மாந்துறை கல்வி வலயம், அக்கறைப்பற்று கல்வி வலயம், திருக்கோவில் கல்வி வலயம், அம்பாறை கல்வி வலயம், மகாஓயா கல்வி வலயம், தெஹியத்தகண்டி கல்வி வலயம் ஆகியவற்றில் வகுப்பறைக் கட்டடங்கள்; நிர்மாணிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பொத்துவில் அல் இஸ்றக் வித்தியாலயம், அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயம், அக்கரைப்பற்று முகம்மதியா ஜுனியர் கல்லூரி, அக்கரைப்பற்று ஜுனியர் கல்லூரிகளில் வகுப்பறைக் கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கான இறுதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில், அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்தில்; வகுப்பறைக் கட்டடம் நிர்மாணிக்க ஒதுக்கப்பட்டிருந்த நிதி இடைநிறுத்தப்பட்டு வேறு மாவட்டப் பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இந்த வித்தியாலயத்தில் வகுப்பறைக் கட்டடக் குறைபாடு நிலவுகின்றது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
1 hours ago