Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 08 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
அம்பாறை மாவட்டம், நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வழி மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டமொன்றில் சனிக்கிழமை மாலை ஈடுபட்டனர்.
அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே, அவர்கள் இந்த வழி மறுப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுவொன்றில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம், அட்டப்பள்ளம் உள்ளூர் பிரதான வீதியினால் பயணித்துக் கொண்டிருந்தபோது, தமது குழந்தைகளுடன் பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வீதியின் நடுவே குழுமியிருந்து, சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அமைச்சர் சென்று கொண்டிருந்த வாகன அணித்தொடர் பயணத்தைத் தொடர முடியாத நிலையில், அமைச்சர் வாகனத்திலிருந்து இறங்கி, பொது மக்களுடன் உரையாடினார். இதன்போது அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், குறித்த அனல் மின் நிலையத்தினால் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் விபரித்துக் கூறினர்.
இந்த அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறுகின்ற புகை மற்றும் நச்சு வாயுக்களினால் சுவாச நோய், தோல் நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு தாம் முகங்கொடுப்பதாகவும் கருவில் தரிக்கின்ற குழந்தை கூட கரைந்து செல்கின்ற துர்ப்பாக்கியம் ஏற்பட்டிருப்பதாகவும் சில பெண்கள் அழுது, புலம்பி அமைச்சரிடம் முறையிட்டனர்.
இவற்றை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், இது குறித்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராய்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025