2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2016 நவம்பர் 19 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆயுர்வேத வைத்தியசாலை விடுதி எழுதுனர்கள் 07 பேருக்குமான நியமனக் கடிதங்கள், மாகாண சுகாதார அமைச்சில் வைத்து நேற்று  வெள்ளிக்கிழமை, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.மொஹமட் நஸீரினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த பல வருடங்களாக கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில் காணப்பட்டு வந்த விடுதி எழுதுனர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் 6 பேருக்கான நியமனங்கள் வழங்கி வைத்தோம். இருந்தும் இந்த வெற்றிடங்கள் பூரணமாக நிரப்பப்படவில்லை. இது பெரும் குறையாகவே காணப்பட்டு வந்தது. இதனை சரி செய்யவேண்டும் என்ற நோக்கில் நேற்று 07 பேருக்கான நியமனங்களை வழங்கி வைத்தேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X