2025 மே 08, வியாழக்கிழமை

நடுநிசியில் கொள்ளையடித்த நகைகள் மீட்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

  எஸ்.கார்த்திகேசு

 
அம்பாறை திருக்கோவில் பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் மற்றும் தம்பிலுவில் பகுதிகளில் இரு வீடுகளை உடைத்து சுமார் 35இலட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ள இதேவேளை, நேற்று வியாழக்கிழமை (08) பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவது,  தம்பிலுவில் கிராம வீதியில் அமைந்துள்ள ஆசிரியையின் வீட்டில் நேற்றிரவு சுமார் 2 மணியளவில் வீட்டின்    ஜன்னலை சூட்சுமமாக உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, அலுமாரியில் இருந்து தாலி,மாலை, காப்பு மோதிரங்கள் உட்பட சுமார் 30 இலட்சம் பெறுமதியுடைய   நகைகள் கொள்ளையிட்டு  தம்பிச் சென்றுள்ளனர்.இதேவேளை,  வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தோருக்கு என்ன நடந்தது என்று தெரியாததாக இருந்ததாகவும் வீட்டார் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, கடந்த வாரம் 30ம் திகதி விநாயகபுரம் பழைய தபாலக வீதியில் உள்ள ஆசிரியரின் வீட்டுக் கூரையை உடைத்துக் கொண்டு வீட்டினுள் இருந்த எட்டு பவுண் நகைகள் திருடப்பட்ட நிலையில் அது தொடர்பாக விசாரணைகளையும் பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் , சந்தேக நபர் ஒருவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X