Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஒக்டோபர் 20 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு)
கொழும்பு கொட்டாஞ்சேனை , ராமநாதன் வீதியில் வைத்து கடந்த ஜூன் மாதம் 12ஆம் திகதி மது போதையில் நபர் ஒருவர் மீது அசீட் வீசிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த மூன்று மாதங்களாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் நேற்று இரவு (19) திருக்கோவில் பொலிஸாரால் விநாயகபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
அம்பாறை கல்முனை 01 அம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்திரகுமார் கிருஸ்ணவதன்(35) தனது இளைய மகனின் சிறுநீரக நோயை குணப்படுத்தும் நோக்கில் கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றி தொழில் செய்து கொண்டிருந்த போது தன்னோடு இருந்த இராசரெத்தினம் சுசிகரன் (37) என்னும் சந்தேக நபர் மது போதையில் முகத்தில் அசீட் வீசியதாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் அவர் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை கட்ந்த மூன்று மாதங்களாக பொலிஸார் தேடி வந்த நிலையில் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபலர எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago