2025 மே 07, புதன்கிழமை

நல்லிணக்கத்தோடான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்

Editorial   / 2019 ஜூலை 28 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான் 

  முஸ்லிம் சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில்  எதிர்காலத்தில்  நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க  வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் , கல்முனை 12 வட்டார வேட்பாளர் யு.எல் அப்துல் றஹ்மான் தலைமையில்
புனரமைக்கப்பட்ட வீதிகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர்  அற்கு மேலும்  கருத்துதெரிவிக்கையில்,
  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைமையும் அதன் உறுப்பினர்களும் முஸ்லிம் சமூகமும்  பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் பல வருடங்களாக  முகம் கொடுத்துக் கொண்டுவருக்கின்றது. இந்த காலகட்டத்தில் நாங்கள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலையில்  கட்சியும்   தலைமைத்துவமும்   உயர்பீட உறுப்பினர்களும் இருந்து கொண்டிருக்கின்றோம்.
   சிறுபான்மைக் கட்சிகள், குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு   சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடும்  இருக்கின்றன.
எதிர்காலத்தில் சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு வாழக்கூடிய சுழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அது சில வேளை எங்களுக்குள்ளேயே பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டு  முரண்பட்டுக் கொண்டிருக்காமல் எங்களுக்குள்ளே ஒற்றுமையை வாழ்க்கையை மேற்கொள்ள வழிவகையை தேடவேண்டுமெனக்குறிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்,
கல்முனை பிரச்சினை கூட, தற்போது  பூதாகரமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்காக வேண்டி நாடாளுமன்றத்தில் கட்சி பேதமின்றி இருக்கின்ற அனைத்து உறுப்பினர்களும் என்றும் பல்வேறுபட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோமெனவும் குறிப்பிட்டார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X