Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை கல்வி வலயத்திலுள்ள நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையில் மூன்று மாடி வகுப்பறைக் கட்டடத்தொகுதி அமைப்பதற்கென, தனது முயற்சியின் பயனாக 02 கோடி 20 இலட்சம் (22 மில்லியன்) ரூபாய் நிதியை கல்வி அமைச்சு ஒதுக்கீடு செய்திருப்பதாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் இன்று (11) தெரிவித்தார்.
ஏற்கனவே தனது முயற்சியினால் கல்வி அமைச்சின் 04 கோடி ரூபாய் செலவில் 1200 இருக்கைகள் கொண்ட சகல வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம் ஒன்று இப்பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அது திறந்து வைக்கப்படும்போது, மேற்படி வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிதியொதுக்கீடுகளுக்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் மேலும் குறிப்பிட்டார்.
இப்பாடசாலையின் பழைய மாணவர் என்ற ரீதியில் தான் கற்ற பாடசாலையின் அபிவிருத்திகளுக்கு உதவக் கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
36 minute ago
1 hours ago
2 hours ago