Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எல்.ரி.யுதாஜித், பாறுக் ஷிஹான்
மக்களுக்குத் தேவையற்ற பீதிகளை உருவாக்கும் வண்ணம் வர்த்தகர்கள் நினைத்தவாறு கடைகளை மூட வேண்டாமெனத் தான் கேட்டுக் கொள்வதாக அம்பாறை மாவட்டச் செயலாளர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம், அம்பாறை மாவட்டச் செயலகத்தில், இன்று (19) நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, “தவறான பிரசாரங்கள் ஊடாகச் செயற்பட்டு, மக்களை அச்சமடையச் செய்ய வேண்டாம். மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேசிய ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்களை மாத்திரம் அமுல்படுத்த வேண்டும்” என்றார்.
அதேவேளை, வர்த்தகர்கள், மாவட்டத்தில் வாழும் மக்களின் தேவைக்கேற்ப பொருள்களைக் களஞ்சியப்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சமுதாயத்திலுள்ள ஒவ்வொருவரும் பொறுப்பு வாய்ந்தவர்கள் என்ற வகையில் மக்களைத் திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
8 hours ago