2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘நியாயமான முறையில் இடமாற்றம் வேண்டும்’

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

2021ஆம் வருடத்துக்குரிய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம் நியாயமான முறையில் இடம்பெற வேண்டுமென,   அனைத்து முகாமைத்துவ உத்தியோகத்தர் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜீ.முபாறக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்துக்கு இன்று (12) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் தூர இடங்களுக்கு இடமாற்றப்படுகின்றமையால் ஒரு பெருந்தொகைப் பணத்தை பிரயாணச் செலவிற்காக செலவிட வேண்டியுள்ளது.

“ கணவன், மனைவி ஆகிய இருவரும் அரச உத்தியோகத்தர்களாக இருந்தால், அவர்கள் இருவரது கடமை நிலையங்களும் ஒரே பிரதேசமாக அமையக் கூடியவாறு இடமாற்றம் செய்யப்படல் வேண்டுமென இடமாற்றக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.

இவைகளையும் கவனத்திற்கொள்வதுடன், நீண்ட காலமாக தூர இடங்களில் கடமையாற்றுபவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், பாடசாலை செல்லும் பிள்ளைகளைக் கொண்ட தாய்மார்கள், பெண்கள், அலுவலகம் அமைந்திருக்கும் இடத்துக்கான போக்குவரத்து போன்றனவற்றையும் கவனத்திற்கொண்டு, அனைவருக்கும் நன்மை பயக்கத் தக்க விதத்தில் இவ்விடமாற்றம் செய்யப்படல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .