Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
எஸ்.கார்த்திகேசு / 2019 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, பொத்துவில், ஊறணி 60 கட்டை கனகர் கிராம மக்களின் நிலமீட்புப் போராட்டம், நாளையுடன் (14) ஒரு வருடம் பூர்த்தியாகும் அதேவேளை தொடர்ந்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை ஐவர் மரணமடைந்துள்ளமையால் நாளைய தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதாக, இக்காணி மீட்புப் போராட்டத் தலைவி புஞ்சுமாத்தையா ரங்கத்தனா தெரிவித்தார்.
இக்கிராம மக்கள், யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வெளிப் பிரதேசங்களில் அகதிகளாக வாழ்ந்த நிலையில், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் காணிகளுக்குச் செல்வதற்கான அனுமதிகளைக் கோரிய போது, வனபரிபால திணைக்களத்துக்கும் மக்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, அனுமதிகள் வழங்கப்படாது இழுத்தடிப்புச் செய்யப்படுவதாக, அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசியல்வாதிகளின் உறுதிமொழிகள் செல்லாக்காசாகவே இருப்பதாகத் தெரிவித்த அவர், பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் ஆகியோர் தமது கோரிக்கைக்கு செவிசாய்த்து வருகின்ற போதிலும் வனபரிபாலன திணைக்களமே இடையூறு செய்வதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அரசாங்க அதிபர் மட்டத்தில் காணிகளுக்கான ஆவணங்கள் பரிசிலிக்கப்பட்டுள்ளதாகவும் பொத்துவில் பிரதேச செயலகத்தால் 172 பேரின் பெயர் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட்டுதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தாம் இங்கு வாழ்ந்தமைக்கான சகல ஆவணங்களும் இருக்கின்ற போதிலும் பல்வேறுபட்ட சாட்டுப்போக்குகளை அரசாங்கம் கூறிக்கொண்டு, தம்மை தொடர்ந்தும் அதிகளாக வீதி ஓரத்தில் வைத்து வேடிக்கைப் பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago