Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்த நீர்ப் பாவனை கட்டண நிலுவையை செலுத்தாத நீர்ப் பாவனையாளர்களின் இணைப்புகள் துண்டிக்கப்படவுள்ளதாக, அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் கே.என். கரீம் இன்று செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய அதிகார எல்லைக்குட்பட்ட அக்கரைப்பற்று, கல்முனை, மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களிலேயே இந்நீர்த் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள் ளதாகவும் தெரிவித்த பிராந்திய முகாமையாளர் ஒரு மாத கால நிலுவைத் தொகைக்கு மேற்பட்ட பாவனையாளர்களின் நீர்த் துண்டிப்பே மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.
இப்பிரதேசங்களில் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் நிலுவைத் தொகை மற்றும் பாவனையின் அளவு போன்றவற்றைக் கருத்திற்கொண்டே இணைப்பு துண்டிக்கப்படவுள்ளதாகவும், குறிப்பிட்ட தொகை நிலுவையை செலுத்தாமல் உள்ள வாடிக்கையாளர்கள் தமது நீர்க்கட்டணத்தைச் செலுத்தி, அசௌகரியங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நீர் துண்டிப்பு செய்யப்படும் வாடிக்கையாளர் நீர்க்கட்டண பட்டியல் தொகையுடன் தண்டப்பணத்தையும் முழுமையாக செலுத்திய பின்னரே மீளிணைப்பு வழங்கப்படு மெனவும் பிராந்திய முகாமையாளர் கே.என். கரீம் மேலும் தெரிவித்தார்.
9 minute ago
22 minute ago
24 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
24 minute ago
27 minute ago