2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நெசவு உற்பத்தி கிராமத்துக்கு அமைச்சர் விஜயம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 19 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எல்.எம்.ஷினாஸ்

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில், சௌபாக்கியா நெசவு உற்பத்திக் கிராமம், 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மருதமுனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிராமத்தை சமுர்த்தி, வதிவிடப் பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் வணிக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்க, நேற்று (18) மாலை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டப்ளியூ.டி.வீரசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டு, நெசவு உற்பத்தி கிரமத்தின் வேலைத்திட்டங்களைப் பார்வையிட்டனர்.

வருமானம் குறைந்த நெசவு உற்பத்தியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டு, அவர்களுடைய உற்பத்தியை அதிகரித்து, தேசிய பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்வதே இந்தத் இத்திட்டத்தின் நோக்கமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .