Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நற்பிட்டிமுனை பகுதியிலுள்ள சுமார் 13 கண்டங்களிலும் உள்ள வயல் நிலங்களில் நீர் வழிந்தோட முடியாத நிலையில் நீர் தேங்கிக் காணப்படுகின்றன.
இதனால் 5,000 ஏக்கருக்கு மேற்பட்ட நெற் காணிகளில் அறுவடைசெய்ய முடியாத துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கல்முனைக் கண்டம் , நற்பிட்டிமுனை கீழ்-மேல் கண்டம், ஏத்தாளை நீண்டகரை, பண்டித்தீவு, சேவகப்பற்று, மன்டூர் எல்லை போன்ற கண்டங்களிலுள்ள வயல் காணிகளே, இவ்வாறு நீர் தேங்கி நின்று, அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை தொடருமாக இருந்தால் பல மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுமென, விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் முகத்துவாரத்தை வெட்டி நீரை ஓட விடுவதன் ஊடாக ஒருசில மணி நேரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுத்தர முடியும் எனத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், இந்தப் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் இதுவரை தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லையென்றனர்.
தாம் எதிர்நோக்கியுள்ள இந்தப்பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடித் தீர்வை பெற்றுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 minute ago
36 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
41 minute ago
49 minute ago