Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஜனவரி 27 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்றிலுள்ள நெல் களஞ்சியசாலையைப் புனரமைத்து, மீளத் திறக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக, அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் ஐ.எச்.ஏ. வஹாப் தெரிவித்தார்.
இது தொடர்பாக கமத்தொழில், நீர்ப்பாசன மற்றும் கிராமியப் பொருளாதார அபிவிருத்தி, மீன்பிடி அமைச்சர் பி. ஹரிசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“நெல் சந்தைப்படுத்தும் சபைக்குச் சொந்தமான அக்கரைப்பற்றில் அமைந்துள்ள நெல் களஞ்சியசாலை, 1992ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆடைத் தொழிற்சாலையாக இயங்கி வந்து, பின்னர் அது கைவிடப்பட்டது.
“இங்குள்ள கட்டடங்கள் பாழடைந்த நிலையில் காணப்படுவதால், இதனைப் புனரமைத்து, விவசாயிகளின் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு ஆவண செய்யவும்”, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது பெரும்போக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், இக்களஞ்சியசாலை புனரமைக்கப்படும் பட்சத்தில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, இறக்காமம் பிரதேச விவசாயிகள், தமது நெல்லை, அரசாங்க உத்தரவாத விலைக்கு வழங்க முடியுமெனவும் அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago