Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 ஒக்டோபர் 07 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
புதிய அதிபர் சேவை பிரமாணக் குறிப்பின்படி அதிபர் சேவை தரம் 3 இற்காக எதிர்வரும் சனிக்கிழமை (10) நாடளாவிய ரீதியில் நடத்தப்படவிருந்த போட்டிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பி. உதயரூபன் தெரிவித்தார்.
கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை விடைதாள்கள் திருத்தும் பணி நாளை வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றது.
இந்நிலையில்,மறுநாள் சனிக்கிழமை அதிபர் சேவை போட்டிப் பரீட்சைக்கு திகதி குறிப்பிட்டு பரீட்சார்த்திகளுக்கான நேர அட்டவணையும் முன்னதாகவே அனுப்பப்பட்டிருந்தது.
எனினும், க.பொ.த.உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியிலீடுபட்டுள்ளவர்கள் இப்போட்டிப் பரீட்சைக்கு ஆயத்தப்படுத்த முடியாமலும் கொழும்பு போன்ற தூர இடங்களில் விடைத்தாள் திருத்தும் பணியிலீடுபட்டுள்ளவர்கள் பயணக் கஷ்டத்தையும் எதிர்நோக்க வேண்டியுள்ளதால் இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட இன்னும் பலர் இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்திடம் மேற்படி பரீட்சையை பிற்போடும்படி கேட்டுக் கொண்டனர்.
இதனடிப்படையிலேயே பிறிதொரு தினத்துக்கு இந்தப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது என்றார்.
41 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
1 hours ago