2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பிடியாணை பிறப்பிக்கபட்ட இருவர் கைது

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காததால் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரை நேற்று (30) காலை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் இரகசிய பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அக்கரைப்பற்று பதுர் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவரையும் அட்டாளைச்சேனை தைக்கா நகர்  பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்றுத் திங்கட்கிழமை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X