2025 மே 03, சனிக்கிழமை

பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்தை வலயக் கல்வி அலுவலகமாகத் தரம் உயர்த்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 30 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்தை வலயக் கல்வி அலுவலகமாகத் தரம் உயர்த்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரும் பொத்துவில் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான ஏ.எம்.அப்துல் மஜீட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இன்று (30)  அவர் மகஜர் அனுப்பியுள்ளார்.

அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்தை வலயக் கல்வி அலுவலகமாகத் தரம் உயர்த்துவது தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் தீர்மானம்; நிறைவேற்றப்பட்டும்,  இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், ஆசிரியர் பற்றாக்குறையும் பொத்துவில் பிரதேசத்தில் நீண்டகாலமாகக் காணப்படுகின்றது. எனவே, இதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.   

பொத்துவிலானது  அக்கரைப்பற்றிலிருந்து சுமார் 55 கிலோமீற்றருக்கும் அப்பால் உள்ளது. இப்பிரதேச மாணவர்களின் கல்வி சம்பந்தமான சிறிய பணியைப் பெறுவதற்காகக் கூட பொத்துவிலுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அக்கரைப்பற்றுக் கல்வி   வலயத்துக்கே செல்ல வேண்டியுள்ளது.  

எனவே, பொத்துவில் பிரதேச மக்களின் நலன் கருதி கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X