Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா, பைஷல் இஸ்மாயில்
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாயக்கல்லி மலையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு கோரும் பிரேரணை, தன்னால் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"பௌத்த மக்கள் எவரும் வாழாத இறக்காமப் பிரதேசத்தின் மாயக்கல்லி மலையில் கடந்த 2016ஆம் ஆண்டு10ஆம் மாதம் 27ஆம் திகதி ஒரு சில பௌத்த துறவிகளினால் சிலையொன்று அமைக்கப்பட்டபொழுது அவ்விடத்தில் சமாதானத்துக்கு குந்தகம் ஏற்பட்டிருந்தது.
தற்பொழுது இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கு அனுமதிப்பத்திப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள காணியில் எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாமென, இறக்காமம் பிரதேச செயலாளர் காணிச் சொந்தக்காரர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அக்காணியினை பௌத்த விகாரை அமைப்பதற்கு வழங்க வேண்டுமென்ற ஒரு சில செல்வாக்குடன்கூடிய அழுத்தத்தின் காரணமாகவே, இவ்வுத்தரவை பிரதேச செயலாளர் பிறப்பித்துள்ளார் என அறிய முடிகின்றது.
இதே நிலை தொடர்ந்து செல்ல அனுமதிப்பதனால் இப்பிரதேசத்தில் இன முறுகல் தோன்றக்கூடிய சாத்தியப்பாடு ஏற்படலாம்.
ஆகையினால், நாட்டின் பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்துக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளில் மதஸ்தானங்களை அமைப்பது தொடர்பான சட்ட இயைபு போன்ற விடயங்களை ஆராய்வதற்கும் இனமுறுகல் எற்படாமல் தவிர்த்து அவற்றைத் தடை செய்வதற்கு அல்லது ஒழுங்கு செய்வதற்குமென, கிழக்கு மாகாண சபையானது, இச்சபையின் உறுப்பினர்களையம் மேற்படி விவகாரத்துடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய ஆணைக்குழுவொன்றினை உருவாக்குமாறு கோரி இப்பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளேன்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago