2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

புத்தர் சிலை விவகாரத்தில் ஜனாதிபதி அசமந்தம்

Niroshini   / 2016 நவம்பர் 09 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

இறக்காமம், மாணிக்கமடு புத்தர் சிலை சம்பந்தமாக அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் மனோ கணேசனும் அமைச்சரவையில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தும் அதனை நீக்க ஜனாதிபதி உத்தரவாதம் அளிக்காமல் அசட்டை செய்திருப்பதன் மூலம் அவர்கள் இருவரும் அரசாங்கத்திடம் சோரம் போய்விட்டார்கள் என்பதையே எடுத்துக் காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

கடந்த மஹிந்த ஆட்சியின் இறுதிக்காலத்தில் இவ்வாறு சில சிலை வைப்புகள் நடைபெற்ற போதும் அவை இனவாத பௌத்த அமைப்புக்களினாலேயே வைக்கப்பட்டிருந்தனவே தவிர அரசாங்கத்தின் எந்தவொரு சிங்கள அமைச்சரின் நேரடி தலையீட்டின் மூலமும் வைக்கப்படவில்லை. ஆனால், இந்த அரசாங்கத்தில் சிங்கள அமைச்சரின் நேரடி தலையீட்டின் மூலம் தமிழ் பேசும் பகுதியில் சிலை வைக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் இன்னமும் அதனை நீக்குவதற்குரிய அழுத்தத்தை அரசாங்கத்துக்கு கொடுப்பதற்கு முடியாத தலைமைகளாகவே சிறுபான்மை தலைமைகள் உள்ளன என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது.

இத்தனைக்கும் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாகும். அப்படியிருந்தும் அந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் அவர்களின் அமைச்சரவை தலைவராலும் இதற்கு தீர்வு காண முடியவில்லை என்றால் இதை விட மோசமான சோரம் போதல் இருக்க முடியாது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .