2025 மே 03, சனிக்கிழமை

பட்டதாரி பயிலுநர்களுக்கு வாய்ப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பட்டதாரி பயிலுநர்கள் 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை, இலங்கை ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு, தகமையுடைய பட்டதாரி பயிலுநர்களை, இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரதேச செயலகங்களில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கு விருப்பம் தெரிவிக்கும் பட்டதாரி பயிலுநர்களின் விவரங்களை வழங்குமாறு, பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இலங்கை ஆசிரியர் சேவைக்குள் சேர விரும்பும் பட்டதாரி பயிலுநர்கள் தங்களது விவரங்களை பிரதேச செயலாளர்களுக்கு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X