2025 மே 02, வெள்ளிக்கிழமை

பதவியா? மக்களா?

Editorial   / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். எம் இர்சாத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் எதிர்கட்சி அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்  ஏ.சீ. நுஹ்மான் அவர்கள் நேற்று(09) அக்கரைப்பற்றில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த மாநகர சபைத்தேர்தலில் வெற்றி பெற்ற தற்போதய பிரதி மேயர் அஸ்மி ஏ கபூர் அவர்களே, இதற்கு முன்னரான மாநகர சபைக் காலத்தில் தாங்கள் உறுப்பினராக இருக்கின்ற போது, வெள்ளப்பாதுகாப்பு, வீதியில் காணப்படும்  மர ஆலைகள் அனைத்தும் பொது மக்களுக்கு இடைஞ்சலாகவும் சுகாதாரச்சீர்கேடாகக் காணப்படுவதனால் அதனை உடனடியாக வேறு பிரதேசங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்மென பிரேரணை முன்வைத்தீர்கள் ஆனால் எந்தப் பயனுமில்லை.

தற்போதும் இவ்வாறான, மரஆலைகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றது, அதனைச் சூழ பொது மக்கள் வாழந்து வரும் பிரதேசமாகவும் அரச காரியாலயங்கள், பொது விளையாட்டு மைதானம், சிறுவர் நன்நடத்தைக் காரியாலயம், பிராந்திய வானொலியான பிறை எப்.எம்,  போன்ற காரியாலங்களும் காணப்படுகின்றது.

தற்போது, நீங்கள் அதிகாரம் வாய்ந்த ஒரு பிரதி மேயராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள் எனவே  இதற்கான உடனடித்தீர்வாக எதனை செயற்படுத்தப்போகின்றீர்கள் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக என்ன செய்யப் போகின்றீர்கள் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பிர் ஏ.சீ. நுஹ்மான் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வேண்டுமென பிரேரணைகளை முன்வைத்தீர்கள், முடிவு எதையுமே காணவில்லை, தற்பொழுது நீங்கள் பிரதி மேயராக இருக்கிறீர்கள் இதற்கு என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள்?  பதவியா?  மக்களா?


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .