Freelancer / 2022 ஜூன் 09 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் அரிசி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டு அந்த அரிசியை பழைய விலைக்கு பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.
மருதமுனை பகுதியில், அரிசி பதுக்கல் இடம்பெறுவதாக இன்று (9) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்தது.
அரிசி பதுக்கல் இடம்பெற்றதாக அடையாளம் காணப்பட்ட கடைக்கு சென்ற நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள், அரிசியை பழைய விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.
மருதமுனை பகுதியில் குறித்த கடைக்கு, பொதுமக்களே உடனே விரையுங்கள். குறைந்த விலையில் அரிசினை பெறுங்கள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் அங்குள்ளனர் என அப்பகுதியிலுள்ள அந்நூர் பள்ளிவாசலின் ஒலிபெருக்கியிலும் அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு திரண்டு வந்த மக்கள், பழைய விலைக்கு அரிசியை கொள்வனவுச் செய்துகொண்டு சென்றனர்.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026