2025 மே 02, வெள்ளிக்கிழமை

பயிலுநர்களுக்கான நேர்முகப் பரீட்சை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா,ரீ.கே.றஹ்மத்துல்லா

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள இஸ்லாம் மற்றும் விசேட கல்விப் பயிலுநர்களுக்கான நேர்முகப் பரீட்சை அட்டாளைச்சேனை கல்வியியல் கல்லூரியில் எதிர்வரும் 18ஆம், 19ஆம், 20ஆம், 22ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக அக்கல்லூரிப் பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தெரிவித்தார்.

நேர்முகப் பரீட்சைக்கு கடிதம் அனுப்பப்பட்டவர்கள் சகல ஆவணங்களுடனும் காலை 9 மணிக்கு சமூகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அட்டாளைச்சேனை தேசியக் கல்வியியல்; கல்லூரிக்கு விஞ்ஞானம், கணிதம், இஸ்லாம் மற்றும் ஆரம்ப, விசேட கற்கைநெறிகளுக்கு புதிய பயிலுநர்கள் சேர்க்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X