2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘பயணக் கட்டுப்பாடு நீங்கினாலும் தனிமைப்படுத்தல் தொடரும்’

Princiya Dixci   / 2021 ஜூன் 20 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்குமென, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இன்று (20) தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் இன்று காலை முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் 192 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 137 பேரும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 52 பேரும், அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் 03 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் பட்சத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் சமூக இடைவெளியைப் பேணும் முகமாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

அத்தியவசியத் தேவைக்காக வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரமே சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வெளியில் செல்ல வேண்டுமெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .