2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பரீட்சை ஆரம்பம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தினால் நடத்தப்படுகின்ற புதிய பாடத்துக்கான பொது கலைமாணி வெளிவாரிப் பட்டப்படிப்புக்கான முதலாம் வருட முதலாம் பருவ பரீட்சைகள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நவம்பர் 06ஆம் திகதிவரை குறிக்கப்பட்ட நிலையங்களில் நடைபெறவுள்ளதாக

தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், இன்று புதன்கிழமை தெரிவித்தார்.

இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் 067-2052801 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுமாறு பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .